Header Ads

Breaking News
recent

உள்ளுர் உற்பத்திகளை நம்பி வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது !


(பிராந்திய செய்தியாளர் எஸ்.ரி.பிரணவன்)
உள்ளுர் உற்பத்திகளை நம்பி வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது என்று வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்கள் தெரிவித்துள்ளார்

இன்று இந்த கொரேனாவின் தாக்கம் அடிமட்ட விவசாயிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை பாதிப்படைய செய்துள்ளது இந்த அரசு தங்களுக்கான நிவாரணங்களை முழுமையாக தருவார்கள் என்று எதிர்பார்த்து ஏமாறுவதை விட நம்மை நாமே தயார்படுத்திக் கொள்வது இந்த காலகட்டத்தில் பொருத்தமாக இரு க்கும்

இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் சமுர்த்தி நிவாரணம் பத்தாயிரம் லோன் போன்ற விடயங்கள் கூட செயற்பாடுகளில் இல்லை சொன்னது ஒன்று செய்வது ஒன்றாக உள்ளது

இந்த கொரோனா ஊரடங்கு மூலம் நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால் விவசாயிககளினதும் மீன் தொழில் 
செய்பவர்ககளினதும் உற்பத்திதான் இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் எமது மக்களை காப்பாற்றி வருகிறது

அதனால் விவசாயம் மீன் பிடி மேட்டு நிலப் பயிர்ச் செய்கைகளை மேலும் அதிகமாக ஊக்கப்படுத்த வேண்டும் ஒரு வீட்டில் தங்களிடம் உள்ள தண்ணீர் வளங்களை வைத்துக் கொண்டு ஆகக் குறைந்தது சிறிய வீட்டுத் தோட்டங்களை செய்ய ஆரம்பிக்க வேண்டும் அதே போல் கூட்டு பயிர் ச்செய்கைக்கு அனைவரும் திட்டமிட வேண்டும் மரவள்ளி கிழங்கு உட்பட சகல பயிர்ச் செய்கைகளையும் செய்வதற்கு மக்கள் தயாராக வேண்டும்

அரசும் உள்ளுரில் செய்யப்படும் உற்பத்திப் பொருட்களை வெளியில் இருந்து இறக்குமதி செய்வதில்லை என்று தீர்மானங்களை எடுத்துள்ளது

இனிவரும் காலங்னளில் உள்ளுர் உற்பத்திகளை நம்பித்தான் நாம் வபாழ வேண்டியளவர்களாக இருக்கின்றோம் எனவே எங்களது உள்ளுர் உற்பத்திகளை அடிமட்டத்தில் இருந்து அதை செய்வதற்கு தூண்ட வேண்டும்இதனை மேற்கொள்வதன் மூலம் எதிர்கால பட்டினி சாவில் இருந்து தமிழர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். என அவர் தெரிவித்திருந்தார்
Powered by Blogger.