Header Ads

Breaking News
recent

வியாபார நிலையமொன்றுக்கு சீல் !!!



திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் டீ சந்தியில் உள்ள வீதியோரப் புடவைக் கடையொன்றுக்கு, மறு அறிவித்தல்வரை, நேற்று (09) சீல் வைக்கப்பட்டது.

குறித்த வியாபார நிலையத்தில், வெளி மாவட்டத்தவர்கள் கடமை புரிவதாகப் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து, நேற்று (09) குறித்த வியாபார நிலையத்துக்கு, கிண்ணியா நகரசபைத் தவிசாளர் தலைமையிலான பொலிஸார் குழு சென்றிருந்தனர்.

உரிய வியாபார நிலையத்தில் வெளி மாவட்டத்தார் இருப்பதை உறுதிப்படுத்தியதன் பின்னர், மறு அறிவித்தல் வரை கடைக்கு சீல் வைத்தனர்.

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, தவிசாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறாக வெளி மாவட்டத்தைச் சேர்ந்த வியாபாரிகள், கிண்ணியாவுக்குள் வருகை தந்தால், உடன் தனக்கு அறியத்தருமாறு, தவிசாளர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.
Powered by Blogger.