Header Ads

Breaking News
recent

வியாபார நடவடிக்கைகள் பிரதேச சபை வளாகத்தில்!

(பிராந்திய செய்தியாளர் எஸ்.ரி.பிரணவன்)
புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் வேண்டுதலுக்கமைய இன்றைய தினம் சந்தை வியாபார நடவடிக்கை இடம்பெற்றது.

ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் சந்தை வியாபார நடவடிக்கைகள் புதுக்குடியிருப்பு பிரதேச சபை வளாகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

தற்போது நாட்டின் கொறொனா தொற்று ஏற்பட்ட சூழ்நிலையை மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியிருந்த நிலையில் இன்று அவர்கள் தங்கள் தேவைக்காக மரக்கறி மற்றும் பழ வகைகளை விற்பனை செய்வதற்காகவே இன்று இந்த வியாபார நடவடிக்கைகள் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளரால் ஒழுங்கு படுத்தப்பட்டது. மக்களின் அடிப்படை தேவைகளையும் அவர்களின் சுயபாதுகாப்பு மற்றும் சுகாதார தேவைகளை கருத்தில் கொண்டே இன்று இந்த வியாபார நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Powered by Blogger.