வெளிமாவட்டங்களுக்கு சென்று பொருட் கொள்வனவு செய்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர் !

கிண்ணியாவின் வர்த்தக சங்கத்தின் கட்டுப்பாட்டை மீறி பொருட்கொள்வனவில் ஈடுபட்ட வர்த்தகர்கள் சிலரின் பொருட்கள் சுற்றிவளைக்கப்பட்டது.
கிண்ணியா வர்த்தக சங்கத்தினால் ஏகமனதாக எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய வெளிமாவட்டங்களுக்கு சென்று பொருட் கொள்வனவு செய்யமுடியாது என்று அறிவுறுத்தல்கள் வழங்க பட்ட நிலையில் கட்டுப்பாட்டை மீறி பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்ட வர்த்தகர்கள் சிலரின் பொறுட்களூக்கு கிருமி நாசினி தொழிக்கப்பட்டதுடன் அவ் வர்த்தகர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
