Header Ads

Breaking News
recent

அரச நிறுவனங்கள் இயங்கவேண்டிய முறைமை குறித்த அவற்றின் பணிப்பாளர்களுக்கான அறிவுறுத்தல்:

22ஆம் திகதி, புதன், கொழும்பு மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் - அரச நிறுவனங்கள் இயங்கவேண்டிய முறைமை குறித்த - அவற்றின் பணிப்பாளர்களுக்கான அறிவுறுத்தல்:

அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் பணிப்பாளர்கள், 22ஆம் திகதி, புதன் முதல் ஒன்றுகூடி - தமது நிறுவனங்களின் எதிர்காலச் செயற்பாடுகள் குறித்து திட்டமிட வேண்டும்.

ஏப்ரல் 22ஆம், 23ஆம் மற்றும் 24ஆம் திகதிகளில் - கொழும்பு மாவட்டத்தில் உள்ள அரச நிறுவனங்களின் பணிப்பாளர்கள் தமது பிரதிப் பணிப்பாளர்கள் உட்பட ஏனைய முக்கிய அதிகாரிகளை ஒன்றுகூட்டித் தத்தமது நிறுவனங்களில் பணிக்கு அழைக்கப்படவுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை, அழைக்கப்பட வேண்டிய அதிகாரிகள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் பணிகள் ஆகியவற்றை தீர்மானிக்குமாறு அரச நிறுவனங்களின் பணிப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒன்றுகூடி மேற்கொள்ளப்படும் தீர்மானங்களின் அடிப்படையில் - செயற்திட்டமொன்றைத் தயாரித்து - 27ஆம் திகதி, திங்கள், முதல் அதனை அவர்கள் நடைமுறைப்படுத்த வேண்டும்.

அவ்வாறு தயாரிக்கப்படும் தமது பணிச்்செயற்திட்டம் பற்றிய விபரத்தை எனது செயலாளருக்கு அறிவிக்குமாறும் நிறுவனங்களின் தலைவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
Powered by Blogger.