வவுனியா மயிலங்குளம் குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குளத்தில் மீன் பிடிக்கச் சென்றவரே இன்று (15) நீரில் மூழ்கியுள்ளார்.
ஆசியகுளம் பகுதியை சேர்ந்த நகுலேஸ் (43) எனும் 04 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மீன் பிடிப்பதற்கு சென்ற இவர், குளத்தில் மூழ்கிய நிலையில் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு 1990 அவசர அம்பியூலன் வண்டியில் வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பிய போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார்.