Header Ads

Breaking News
recent

காலாவதியான அரிசி மீட்பு லொறியின் சாரதி கைது!


(அப்துல்சலாம் யாசீம்)
மூதூரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி லொறி ஒன்றில் "அத்தியவசிய சேவை" என பொறிக்கப்பட்ட சின்னத்துடன்  காலாவதியான அரிசி வகைகளை எடுத்துச்சென்று லொறியின் சாரதி கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று (07)  மாலை ரொட்டவெவ இராணுவ சோதனைச்சாவடியில்  சோதனையிட்டபோது  கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

மூதூரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி லொறி ஒன்றில் 400 கிலோ கிராம் அரிசியை காலாவதியான திகதி பொறிக்கப்பட்ட பேக்கில் எடுத்துச் செல்வதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து  மொரவெவ பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் டி. ஜே. இந்திக சம்பத் மற்றும் பொலிஸார் சோதனையிட்ட போது 400 கிலோ கிராம் அரிசிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் புத்தளம், தெவன செதபுங் கனுவ, சஹீரா கதவுற, பகுதியைச் சேர்ந்த எம். ஹூசைன் முகம்மது சர்ராஜ் (29வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

மூதூர் பகுதியிலுள்ள சப்ராஸ் அரிசி ஆலையில் குறைந்த விலையில் அரிசியை பெற்றதாகவும் காலாவதியான அரிசியை ஏமாற்றி தந்ததாகவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்தனர். 

 கைப்பற்றப்பட்ட அரிசியுடன் சந்தேகநபரை பொலிஸ் பிணையில் விடுவிக்கவுள்ளதாகவும், வாகனத்தை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும்  மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர். 

Powered by Blogger.