ஜேர்மன் "நம்பிக்கை ஒளி"அமைப்பின் அனுசரணையில் மக்களுக்கான அத்தியவசிய பொருட்கள் வழங்கிவைப்பு
(எஸ்.ரி.பிரணவன்)
இன்று 28.04.2020 ஜேர்மன் நம்பிக்கை ஒளி அமைப்பின் பிரதான நிதி அனுசரணையில் குறித்த மரக்கறி வகைகள் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாத்தளன் அம்பலவன்பொக்கணை வலைஞர்மடம் முள்ளிவாய்க்கால் பகுதிகளில்
வசிக்கும் வறுமைக்குட்பட்ட குடும்பங்களிற்கு அவர்களுக்கான மரக்கறி வகைகள் இன்றைய தினம் வழங்கிவைக்கப்பட்டது.
குறித்த பகுதிகளில் கொறொனா வைரஸ் தாக்கம் காரணமாக மக்களின் பொருளாதாரம் மற்றும் அவர்களின் ஜீவநோபாயம் என்பன முற்றாக முடங்கியிருந்த நிலையில் அவர்களை இனங்கண்டு சுமார் 635குடும்பங்களுக்கான அத்தியவசிய பொருட்களை நம்பிக்கை ஒளி அமைப்பின் முல்லை மாவட்ட செயலர் திரு.வாசன் அவர்களின் வேண்டுதலுக்கு அமைவாக வழங்கிவைக்கப்பட்டது.
இச் செயற்திட்டதில் MAX தமிழின் ஊடக அனுசரணையில் Max தமிழ் ஊடக வலையமைப்பின் பிராந்திய செய்தியாளர் திரு.எஸ்.ரி.பிரணவன் அவர்களும் இணைந்து வழங்கினார்.
குறித்த அமைப்பானது வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதாரம் மற்றும் கல்வி செயற்பாடுகளை முன்னுரிமைப்படுத்தி செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



