மேலும் ஒரு கர்ப்பிணிப்பெண்ணுக்கு கொரோனா தொற்று!

இப் பெண், கொரோனா தொற்றுக்குள்ளானோருடன் சமூக தொடர்புகளைப் பேணியமையால், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட கொட்டாஞ்சேனை, பண்டாரநாயக்கபுற பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண்ணை பிரத்தியேக வார்ட்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளதுடன், தற்போது குறித்த பெண்ணுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, முல்லேரியாவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக, வைத்தியசாலை தரப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கர்ப்பிணிப் பெண் தங்கியிருந்த வார்ட் முழுமையாக தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னரும் கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பிணிப் பெண்ணொருவர் பேருவளை பகுதியில் இனங்காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது