திருகோணமலை பிரதேச சபை நலன்புரி சங்கத்தினால் இரண்டாம் கட்ட நிவாரண உதவி!

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை நலன்புரி சங்கத்தினால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நி்லை காரணமாக பாதிககப்பட்ட 350 குடும்பஙகளுககு முதல் கட்டடமாக உலர் உணவுப் பொதிகள் வழங்கப் பட்டது.
இவ் உதவிக்குரிய நிதியை (Rs.350,000/=) சிங்கப்பூரில் வாழும் திருமதி தவம் அவர்களால் திருகோணமலை றோட்டரி கழகத்தின் ஊடாக வழங்கப் பட்டது.
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் Vick & Karen இச் செயல்பாடடை ஒருங்கிணைத்தார்கள்.
இவ் உதவி வழங்களின் போது மேலும் பலர் தேவையோடு இருப்பதாய் அறிந்த அவர்கள் மேலதிகமாக Rs.350,000/= அனுப்பி வைத்தார்கள்.
இவ் பண உதவியைக் கொண்டு மேலும் 350 பொதிகள்
18-04-2020 அன்று, இது வரை எவ் வித உதவியும் கிடைக்காத குடும்பங்களை இனம் கண்டு வழங்கப் பட்டது.
ஊரடங்குச் சட்டத்தின் காரணமாக அன்றாட உணவுத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத ஒவ்வொரு குடும்பத்துக்கும் Rs. 1000/= பெறுமதியான பொருட்கள் அவர்களுடைய வீடு வீடாகச் சென்று வழங்கப் பட்டது.
அன்றாடம் கூலி வேலை செய்பவர்களும், விதவைகளும், மாற்றுத் திறனாளிகளும், வருமானம் அற்று இருப்பவர்களும் அடங்கும்.

