Header Ads

Breaking News
recent

ஊரடங்கு நேரத்தில் புதையல் தோண்டிய பௌத்த பிக்கு ஒருவர் உள்ளிட்ட நான்கு பேர் சிக்கினர்.



அஹங்கம பிரதேசத்தில் புதையல் தோண்டிய பௌத்த பிக்கு ஒருவர் உள்ளிட்ட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர்கள் புதையல் தோண்டுவதாக கிராம மக்கள் செய்த முறைப்பாட்டுக்கு அமைய காவல்துறையினர் இன்று மாலை அவர்களை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் குழி தோண்டிக் கொண்டிருந்த போது காவல்துறையினர் அவர்களை மடக்கிப் பிடித்துள்ளனர்.

புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வாகனம் என்பனவற்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த பௌத்த பிக்கு கடுவல பிரதேச விஹாரை ஒன்றைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட நபர்கள் ஒரு மாத காலம் அஹங்கம பகுதியில் தங்கியிருந்ததாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் நாளைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதிலும் கடுமையான விதிகள் பின்பற்றப்பட்டுவரும் நிலையில் குறித்த பௌத்த பிக்கு உள்ளிட்டவர்கள் இவ்வாறு புதையல் தோண்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.