Header Ads

Breaking News
recent

முல்லைதீவு முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் எழுச்சியாக இடம்பெற்றது!



இறுதி யுத்தத்தின்போது உயிர்நீத்த தமிழ் மக்களின் 11ஆம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வு முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றுள்ளது.

நினைவேந்தல் நிகழ்வின் பிரதான பொதுச்சுடர் காலை 10 மணிக்கு ஏற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொள்கை பிரகடன அறிக்கை வெளியிட்டப்பட்டதுடன், மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. உறவுகளை இழந்தவர்கள் முள்ளிவாய்க்கால் மண்ணில் கண்ணீர் விட்டும் கதறியும் அழுது தமது ஆற்றமுடியாத் துயரை வெளிப்படுத்தினர்.

இன்றைய நினைவேந்தல் நிகழ்வில் சமூக இடைவெளி பின்பற்றப்பட்டிருந்தாக கூறப்படுகிறது.

இன்றைய நினைவேந்தல் நிகழ்வு குறித்து முல்லைத்தீவு பொலிஸாருக்கு நேற்றைய தினம் தெளிவுபடுத்தல்கள் வழங்கப்பட்டிருந்ததாக ஏற்பாட்டு குழுவினர் முன்னரே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



Powered by Blogger.