Header Ads

Breaking News
recent

பேஸ்புக்கில் வெளியான தவறான தகவலால் குடும்பஸ்தர் தற்கொலை!!

(எஸ்.ரி.பிரணவன்)
பேஸ்புக்கில் வெளியான தவறான தகவலால் மனவிரக்தியடைந்த நபர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார். யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் ஏ-9 வீதியோரமாக உள்ள அரச மரமொன்றிலேயே அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று காலை குறித்த சடலத்தை அடையாளம் கண்ட பொதுமக்கள், சாவகச்சேரி பொலிஸாருக்குத் தகவல் வழங்கிய நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சாவகச்சேரியில் உள்ள புகைப்பரிசோதனை நிலையம் ஒன்றில் பணிபுரியும், கல்வியங்காட்டைச் சேர்ந்த இராசு தீபன் (வயது-28) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வருகின்றது.

குறித்த நபர் தொடர்பில் நேற்று முன்தினம் பேஸ்புக் ஒன்றில் தவறான தகவல்கள் வெளியிடப்பட்டிருந்ததுடன், புகைப்பட ஆதாரங்களும் அதில் பதிவிடப்பட்டிருந்தது.

இதனால் ஏற்பட்ட மன விரக்தியே இவர் தற்கொலை செய்து கொள்ளக் காரணமாக இருக்கலாம் என ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை குறித்த பேஸ்புக்கில் உயிரிழந்த நபர் தொடர்பான தகவல்கள் தற்போது நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Powered by Blogger.