நாளை முதல் அனைத்து வியாபார நிலையங்களையும் மூட தீர்மானம் !!
(முனீஸ் ஆசிரியர்)
திருகோணமலை - கிண்ணியா நகர சபை எல்லைக்குட்பட்ட அனைத்து வியாபார நிலையங்களும் நாளை (20) முதல் நோன்பு பெருநாள் முடியும் வரை மூடிவிட, கிண்ணியா நகர சபையினால் தீர்மானம் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
இவ் தீர்மானமானது சமூக இடைவெளியை பேனவும், தேவையற்ற சனநடமாட்டதை தவிர்க்கவும், கொவிட் 19 வைரஸ் நோய் ஆபத்திலிருந்து மக்களை பாதுகாப்பதோடு, மற்ற சமூகத்தினர் போன்று, நாங்களும் எமது நோன்பு பெருநாளை அமைதியாக கொண்டாடவும் இவ் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்டுகின்றது.


