சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது!
(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்ரீமங்களபுர சுன்னக்காடு பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச்சென்ற நான்கு டிப்பர் லொறியுடன் நான்கு பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சூரியபுற விசேட பொலிஸ் அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி கயான் பெரேரா குழுவினர் நேற்றிரவு (31) மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
மணல் ஏற்றிச்சென்ற அப்பர் வாகனங்களை சோதனையிட்டபோது காலாவதியான அனுமதிப்பத்திரத்தை வைத்து மணல் ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை சேருநுவர பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் விசேட பொலிஸ் அதிரடி படையினர் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 40 மற்றும் 45 வயது உடையவர்கள் எனவும் கைது செய்யப்பட்ட நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
