Header Ads

Breaking News
recent

நெடுந்தீவு படகு சேவை நாளை முதல் வழமைக்கு!!!

நெடுந்தீவு - குறிகாட்டுவான் இடையான படகுச் சேவைகள் நாளை (ஜூன் 1) திங்கட்கிழமை முதல் வழமைபோல இடம்பெறவுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் எப்.சி. சத்தியசோதி அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நெடுந்தீவு - குறிகாட்டுவான் படகுச் சேவைகள் கடந்த மார்ச் 20ஆம் திகதி தொடக்கம் இடைநிறுத்தப்பட்டன.

இப் படகு சேவைகள் நாளை முதல் வழமை போன்று இடம்பெறவுள்ளது. ஏனைய படகு சேவைகளும் வழமை போன்று சேவையில் ஈடுபடும். மேலும்கொரோனா தொற்று காரணமாக சமூக இடைவெளியை பேணியே பொதுமக்கள் படகுகளில் பயணிக்க வேண்டியுள்ளதன் காரணமாக மேலதிக படகு சேவைகள் நடத்தப்படும் என்றும் பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.