ரகம பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு !!!
ராகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஹர சிறைச்சாலையில் இன்று அதிகாலை 2.30 முதல் 3 மணி வரையிலான காலப்பகுதிக்குள்ளேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக. பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.மஹர சிறைச்சாலையின் கைதிகள் 7 பேர், சிறைச்சாலை மதில் மீது ஏறி தப்பிக்க முற்பட்ட வேளை சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகளால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த கைதி சிகிச்சைக்காக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் னர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், சம்பவத்தில் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
