பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடல் முடிவடைந்தது.
இந்த கலந்துரையாடல், முற்பகல் 10.15 இற்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த கலந்துரையால் 12.45 இற்கு நிறைவடைந்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று தற்போதைய நிலவரம் தொடர்பில் கந்துரையாடப்பட்டதாகவும், கொரோனாவை இல்லாதொழிக்க அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைதிட்டங்கள் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளதாகவும் அந்த காரியாலயம் மேலும் தெரிவித்துள்ளது.
அத்துடன், கொரோனா ஒழிப்பிற்கு கிடைத்த நிதி தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட விளக்கம் ஒன்றை அளித்துள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இச்சந்திப்பில் எதிர் கட்சி சார்பில் எவரும் கலந்துக்கொள்ளாத போதிலும் இலங்கை தமிழரசு கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
