Header Ads

Breaking News
recent

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை எட்டாக இன்று அதிகரித்தது.

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர் எண்ணிக்கை எட்டாக இன்று அதிகரித்தது. ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 72 வயதுடைய பெண்ணான குருணாகல் - பொல்பித்திகம பிரதேசத்தைச் சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் இலங்கை கடற்படை சிப்பாய் ஒருவரின் நெருங்கிய உறவினர் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த பெண்ணுக்கு கடற்படை சிப்பாயின் ஊடாகவே கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

உயிரிழந்த பெண் ஏற்கனவே சிறுநீரக தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. கொரோனா தொற்றினால் உயிரிழந்த முதலாவது பெண்ணாக இவரின் மரணம் பதிவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
Powered by Blogger.