Header Ads

Breaking News
recent

சினிமா நடிகையை பார்க்க வேண்டும் என்பதற்க்காக உயிரை விட்ட யாழ்ப்பாண யுவதி !!!

யாழில் விசித்திரமான காரணத்திற்காக தனது உயிரை இளம் யுவதி ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்கு தானே தீ வைத்து மாய்த்துக்கொண்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் கொட்டைக் காடு மல்லாகம் பகுதியை சேர்ந்த வயது 26 இளம் யுவதியே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மல்லாகம் பகுதியில் வசித்து வரும் குறித்த யுவதி கடந்த ஒரு மாதமாக தென்னிந்திய சின்னத்திரை நடிகை ஐஸா என்பவரை பார்ப்பதற்கு தன்னை இந்தியா அழைத்து செல்லுமாறு கேட்டுள்ளார். எனினும் பெற்றோர்கள் கொரோனா வைரஸ் காரணமாக நிலவும் நெருக்கடியில் தற்போது செல்ல முடியாது பின்னர் அழைத்து செல்வதாக கூறி வந்துள்ளனர்.
சின்னத்திரை நடிகை ஐஸா

இந்நிலையில் தன்னை கூட்டி செல்வதாக தொடர்ந்தும் ஏமாற்றுவதாக கூறி நேற்று  வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்கு தானே தீ வைத்துள்ளார்.
தீக்காயத்திற்கு உள்ளான யுவதியை உடனடியாக தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு குறித்த யுவதி மாற்றப்பட்டுள்ளார்.
எனினும் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினமே மாலை உயிரிழந்துள்ளார். இந்த இறப்பு தொடர்பாக மேலதிக விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டுள்ளார்.
Powered by Blogger.