Header Ads

Breaking News
recent

53 பேர் நாடு திரும்பினர்!!


தமிழகத்தில் தங்கியிருந்த 53 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் மூலம் அவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

சென்னையில் இருந்து வருகை தந்துள்ள குறித்த இலங்கையர்கள் 51 பேருடன் 2 சிறுவர்களும் வருகை தந்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாடு திரும்பிய அனைவரும் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பரிசோதனை முடிவு கிடைக்கும் வரை அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த ஹோட்டல்களில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
Powered by Blogger.