ஹெரோயின் வைத்திருந்த ஒருவருக்கு விளக்கமறியல் மற்றவருக்கு தீவிர விசாரணை!!
(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் எட்டாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், மற்றைய சந்தேக நபரை தீவிர விசாரணைக்கு உட்படுத்துமாறும் திருகோணமலை நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் சுபாஷினி சித்திரவேல் முன்னிலையில் இன்ற் (27) ஆஜர்படுத்திய போதே கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் திருகோணமலை- கண்டி வீதி, 04கட்டை பகுதியைச் சேர்ந்த கடுபிடிய அசேன் ரங்கன (29 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
480 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை அதே பகுதியைச் சேர்ந்த தசுன் தனுஜய குணசேகர (23வயது) 3290 மில்லி கிரேம் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்துமாறும் திருவண்ணாமலை நீதிமன்ற பதில் நீதவான் சுபாஷினி சித்திரவேல் கட்டளையிட்டார்.
இதேவேளை ஏற்கனவே முன் குற்றங்கள் இருப்பதாகவும் இவர் தொடர்ந்தும் விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும் நீதவான் முன்னிலையில் பொலிஸார் குறிப்பிட்டனர்.
