முகக்கவசம் இல்லாதவர்கள் மீது இனி கடும் நடவடிக்கை !!
முகக்கவசம் அணியாதவர்கள் நாளை முதல் சுயதனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சுகாதார அறிவுறுத்தல்களை தொடர்ந்தும் பின்பற்றுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உரிய சுகாதார முறைமைகளை பின்பற்றத் தவறுவோரை, நோய் தடுப்பு, தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்
