Header Ads

Breaking News
recent

பிறந்து ஒரு நாளான சிசு கொடூரமாக கொல்லப்பட்டு புதைத்த கொடூரம்!



நோர்வுட், ஜனபதய கொலனி பகுதியிலுள்ள வீடொன்றின் பின்புறத்தில் மானா தோப்பிற்குள், பிறந்து ஒரு நாளான சிசு புதைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை 6.30 மணியளவில் 119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்திற்கு
வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய நோர்வுட் பொலிஸார் அப்பகுதிக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

திருமணமாகாத 26 வயதுடைய பெண்ணே இவ்வாறு குழந்தயை பிரசவித்து புதைத்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த பெண் ஒரு பிள்ளையின் தாய் எனவும் இரண்டாவது முறையாக, புதைக்கப்பட்ட குழந்தையை பிரசவித்துள்ளமைக்கான தடயங்கள் வீட்டின் அருகாமையில் காணப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை ஹட்டன் நீதிமன்ற நீதவான் வரவழைக்கப்பட உள்ளதோடு நீதவான் தலைமையில் விசாரணைகளை மேற்கொண்டு புதைக்கப்பட்ட சிசுவின் சடலம் மீட்கப்பட உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Powered by Blogger.