Header Ads

Breaking News
recent

பிரபல ஒளிப்பதிவாளராக காலமானார்.



தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 50 இற்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கண்ணன் இன்று (13) காலமானார்.

அத்தோடு, பாரதிராஜாவின் 40 படங்களுக்கு இவர் ஒளிப்பதிவாளராக இருந்திருக்கிறார்.

பிரபல ஒளிப்பதிவாளரான கண்ணன் (69), சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

 இருப்பினும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் இன்று மதியம் அவர் காலமானார்.

கண்ணனின் உடல் ஆழ்வார்பேட்டையிலுள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை (14) பெசன்ட் நகர் மயானத்தில் இறுதிச்சடங்கு நடக்கவுள்ளது. கண்ணனின் மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Powered by Blogger.