Header Ads

Breaking News
recent

வேக கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் வாகன சாரதி படுகாயம்

(எஸ்.ரி. பிரணவன்)
வேக கட்டுப்பாட்டை இழந்ததினால் முச்சக்கரவண்டி ஓன்று விபத்துக்குள்ளானதில் வாகன சாரதி படுகாயமடைந்துள்ளதுடன் முச்சக்கர வண்டியும் சேதமடைந்துள்ளது. 

கிளிநொச்சியில் இருந்து வவுனியாவுக்கு பயணித்த முச்சக்கர வண்டி சாரதி மற்றும் வயோதிபர் ஆகிய இருவரும் வவுனியா பண்றிகொய்த குளம் அருகே வேக கட்டுப்பாட்டை இழந்த நிலையில் முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இச்சம்பவத்தில் முச்சக்கர வண்டியானது சேதமடைந்துள்ளதுடன் முச்சக்கர வண்டியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் தற்போது வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மேலதிக விசாரணகைள் நடை பெற்று வருகின்றது.
Powered by Blogger.