கிணறு ஒன்றிலிருந்து இளம் யுவதியின் சடலம் மீட்பு!!
(எஸ்.ரி. பிரணவன்)
புதுக்குடியிருப்பு மாணிக்கபுரம் பகுதியில் கிணற்றிலிருந்து இளம் யுவதியின் சடலம் ஒன்று இனம்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (03) குறித்த சம்பவமானது கடந்த 03 தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற நிலையில் இன்று காலை சடலம் கிணற்றிலிருந்து இனங்காணப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் மாணிக்கபுரம் கிராமத்திலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சடலமாக மீட்க்ப்பட்ட குறித்த யுவதி அதே கிராமத்தை சேர்ந்த 21 வயதுடைய இராமலிங்கம் நிறோஜினி என்பது கண்டறியப்பட்ட நிலையில் கொலையா தற்க்கொலையா என்பதை கிராம சேவையாளர் திரு. உமாஜிதன் மற்றும் புதுக்குடியிருப்பு பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர். பிரேதே பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
