Header Ads

Breaking News
recent

லொறி விபத்துக்குள்ளானதில் சாரதி மரணம்!!!

(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை - ஹொரவ்பொத்தான பிரதான வீதி வில்கம் விகாரை பகுதியில் லொறியொன்று விபத்துக்குள்ளானதில் லொறியின் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்விபத்து இன்று (03) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

அனுராதபுரத்திலிருந்து திருகோணமலை நோக்கி சீமெந்து ஏற்றுவதற்காக பயணித்துக்கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. 

இவ்வாறு உயிரிழந்தவர் கண்டி-கலகெதர பகுதியைச் சேர்ந்த சன்ஜய சதுன் விக்ரமசிங்க (33வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Powered by Blogger.