Header Ads

Breaking News
recent

இந்தியாவும், சீனாவும் இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும் : இங்கிலாந்து வலியுறுத்து!



எல்லை பிரச்சனை விவகாரத்தில் இந்தியாவும், சீனாவும் பேச்சுவார்த்தைகளின் மூலம் இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும் என இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்து பாராளுமன்றத்தில், இந்தியா – சீன நாடுகளுக்கிடையிலான மோதல் சம்பவங்களால் இங்கிலாந்து நாட்டின் நலனுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து பழமைவாத கட்சி உறுப்பினர் பிலிக் டிரம்மண்ட் கருத்துத் தெரிவித்திருந்தார்

இதற்குப் பதிலளிக்கும் முகமாகவே இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன், விரைவில் இந்தியாவும், சீனாவும் பேச்சுவார்த்தைகளின் மூலம் ஓர் நிரந்தர உடன்பாட்டிற்கு வரவேண்டும்.

இந்திய மற்றும் சீன எல்லைப் பிரதேசமான லடாக்கில் உள்ள சூழ்நிலை மிகவும் தீவிரமான, கவலைக்குரிய விடயமாகும். இதை இங்கிலாந்து உன்னிப்பாக கவனித்து வருகிறது. எல்லை பிரச்சனையை தீர்க்க இந்தியாவும், சீனாவும் பேச்சுவார்த்தை நடத்துவதை நாங்கள் ஊக்குவிக்கிறோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்
Powered by Blogger.