நாட்டின் அருங்காட்சியகங்கள் ஜூலை மாதம் முதல் மீண்டும் திறக்கப்படும்!

நாடாளாவிய ரீதியில் உள்ள அனைத்து அருங்காட்சியகங்கள் மற்றும் தொல்பொருள் இடங்கள் உட்பட சுவடிகள் திணைக்களம் ஆகியவற்றின் பார்வையாளர் பிரிவு என்பன எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி தொடக்கம் மீண்டும் திறக்கப்படவுள்ளன.
கொழும்பு தேசிய உட்பட 11 அருங்காட்சியகங்கள் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக தேசிய அருங்காட்சியகத் துறைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். நாடாளாவிய ரீதியில் உள்ள அனைத்து அருங்காட்சியகங்கள் மற்றும் தொல்பொருள் இடங்கள் உட்பட சுவடிகள் திணைக்களம் ஆகியவற்றின் பார்வையாளர் பிரிவு என்பன எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி தொடக்கம் மீண்டும் திறக்கப்படவுள்ளன.
கொழும்பு தேசிய உட்பட 11 அருங்காட்சியகங்கள் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக தேசிய அருங்காட்சியகத் துறைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய காலை 9 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரை அருங்காட்சியகங்கள் திறந்திருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பார்வையாளர்கள் சுகாதார அறிவுறுத்தல்களுக்கமைய பின்பற்றி செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.