Header Ads

Breaking News
recent

“த நியுஸ் பேப்பர்” திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களுடன் ஜனாதிபதியும் பார்வையிட்டனர்...

“த நியுஸ் பேப்பர்” திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களுடன் ஜனாதிபதியும் பார்வையிட்டனர்...

கொழும்பு, One Galleface - PVR திரையரங்கில் நேற்று பிற்பகல் இந்த திரைப்படம் திரையிடப்பட்டது.


சரத் கொத்தலாவல மற்றும் குமார திரிமாதுர ஆகியோரின் இணை இயக்கத்தில் உருவான “த நியுஸ் பேப்பர்” திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள்

அமைச்சர் பந்துல குணவர்தன, ரவிந்திர குருகே மற்றும் எச். டி. பிரேமசிறி ஆகியோர் ஆவர்.

ஜூலை 02ஆம் திகதி முதல் நாடு முழுவதும் திரையரங்குகளில் “த நியுஸ் பேப்பர்”

திரைப்படம் திரையிடப்படுவதுடன், அன்று காலை 10.30 முதல் காட்சியை இலவசமாக

பார்வையிடுவதற்கு பொது மக்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவுள்ளது.

கொவிட் ஒழிப்பிற்கு ஒத்துழைப்பு வழங்குகின்ற சுகாதார ஊழியர் குழுவினர், முப்படையினர், பொலிஸ் மற்றும் ஊடகவியலாளர்கள் தமது உத்தியோகபூர்வ அடையாள அட்டையைப்

பயன்படுத்தி ஒருமுறை இந்த திரைப்படத்தை இலவசமாகப் பார்வையிட முடியும்.

ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க, பிரதமரின் செயலாளர் காமினி செனரத் உள்ளிட்ட பலர் திரைப்படத்தின் சிறப்பு காட்சியை நேற்று பார்வையிட்டனர்.

Powered by Blogger.