புதிய தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது!!!

சிறைச்சாலைகளுக்குள் இடம்பெறும் முறைகேடுகள் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பில் தகவல் வழங்குவதற்காக புதிய தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
0112 678 600 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து தகவல்களை வழங்கமுடியும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக புலனாய்வுப் பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றிரவு இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் இதனை கூறியுள்ளார்.
இதனிடையே, சிறைக் கைதிகளை தொழில்களில் ஈடுபடுத்துவதற்காக நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு திறன்விருத்தி தொடர்பான சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்