Header Ads

Breaking News
recent

பாராளுமன்ற தேர்தலும் திருகோணமலையும்!!!



(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க 288868 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாக கிழக்கு மாகாண பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எஸ்.சுதாகரன் தெரிவித்தார்.

2019 ம் ஆண்டு வாக்காளர் இடாப்பின்படி சேருவல தொகுதியில் 80912 வாக்காளர்களும் திருகோணமலை தொகுதியில் 97065 வாக்காளர்களும் மூதூர் தொகுதியில் 110891 வாக்காளர்களும் இவற்றுள் அடங்குவர்.
அத்துடன் 4 பிரதிநிதிகளை தெரிவு செய்ய 189 அபேட்சகர்கள் தேர்தலில் போட்டியிடுவதுடன் இவர்கள் 13 அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சிகள் மற்றும் 14 சுயேட்சைக்குழுக்களை சார்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த மார்ச் மாதம் 12ம் திகதி தொடக்கம் 19ம் திகதி வரையான காலப்பகுதியில் வேட்புமனுத்தாக்கல் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் தாக்கல் செய்யப்பட்ட 16 அரசியல் கட்சிகளின் வேட்புமனுக்களில் 03 அரசியல் கட்சிகளினதும் ,24 சுயேட்சை குழுக்களுள் 10 சுயேட்சை குழுக்களினது வேட்புமனுக்கள் முறையான சத்தியம் மற்றும் உறுதியுரையின்மை போன்ற காரணங்களால் நிராகரிக்கப்பட்டதாகவும் பிரதி தேர்தல்கள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 307 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டதாகவும் இம்முறை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வாக்களிப்பு நடைபெறவுள்ளதால் சில சமயங்களில் குறித்த வாக்களிப்பு நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Powered by Blogger.