Header Ads

Breaking News
recent

அரச ஊழியர்களின் கடமை நேரத்தில் மாற்றம்!



அரச பணியாளர்கள் சேவைக்கு சமுகமளிக்கின்ற நேரத்தை மறுசீரமைப்பு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, இதற்குத் தேவையான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு மேலதிக செயலாளர் ஒருவர் தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, இது தொடர்பான அறிக்கை அடுத்தவாரம் வெளியிடப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், வாகன நெரிசல் மற்றும் சமூக இடைவெளியை பேணுவது தொடர்பான சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் ஆலோசனைக்கு அமைய, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் கூறியுள்ளார்
Powered by Blogger.