Header Ads

Breaking News
recent

MCC உடன்படிக்கையின் உள்ளடக்கங்களை பகிரங்கப்படுத்த முடியாது என அறிவிப்பு!!!



MCC உடன்படிக்கையின் உள்ளடக்கங்களை பகிரங்கப்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MCC உடன்படிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் பேராசிரியர் லலிதசிறி குணருவன் இதனைத் தெரிவித்துள்ளார்.

தகவலறியும் சட்டத்தின் கீழ், குறித்த உடன்படிக்கை இரகசிய உடன்படிக்கையாக காணப்படுவதினால் அதனை பகிரங்கப்படுத்த முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை அரசாங்கம் தெரியப்படுத்தினால் மாத்திரமே அதனை பொது மக்கள் தெரிந்து கொள்ள முடியும் என பேராசிரியர் லலிதசிறி குணருவன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், இவற்றை மீறி அதனை பகிரங்கப்படுத்தினால், அது சட்டத்தை மீறும் செயலாகும் என அவர் கூறியுள்ளார்.

MCC உடன்படிக்கை தொடர்பிரில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கை, கடந்த 25 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளிக்கப்பட்டது.

இதனையடுத்து, குறித்த உடன்படிக்கை தொடர்பில் மக்களின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதற்காக, அதனைப் பகிரங்கப்படுத்துமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, ஜனாதிபதி செயலாளர் பீ.பி ஜயசுந்தரவுக்கு அறிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே, தகவலறியும் சட்டத்தின் கீழ், குறித்த உடன்படிக்கை இரகசிய உடன்படிக்கையாக காணப்படுவதினால் அதனை பகிரங்கப்படுத்த முடியாது என பேராசிரியர் லலிதசிறி குணருவன் சுட்டிக்காட்டியுள்ளார்.
Powered by Blogger.