பெயர் மாற்றம் செய்யப்படவுள்ள Fair & lovely கிரீம், காரணம் இதோ!!!
ஒரு காலத்தில் மேக் அப் என்றாலே அது Fair & lovely க்ரீம் என்றுதான் இந்தியர்கள் புரிந்து கொண்டனர். காரணம் அந்த அளவிற்கு இந்தியாவில் பல ஆண்டுகளாக Fair & lovely க்ரீம்கள் பயன்படுத்தப் பட்டு வருகிறது.
“அழகிய வெள்ளை சருமத்திற்கு Fair & lovely பயன்படுத்துங்கள்” என்று இதன் விளம்பரமும் மிகவும் பிரபலமானது. ஆனால் தற்போது இந்த கீரிமை தயாரிக்கும் இந்துஸ்தான் லீவர் லிமிடெட் இந்திய பிரிவு விற்பனைக்கு அதன் பெயரை மாற்றிக் கொள்வதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
Fair & lovely என்ற பெயரில் உள்ள Fair என்ற சொல் மட்டும் மாற்றப்பட இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. காரணம் இந்தச் சொல் நிறப் பாகுபாட்டை திணிக்கிறது என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து விமர்சனங்களை வைத்து வந்தனர். அதையடுத்து நிறப்பாகுபாட்டை எங்கள் நிறுவனம் ஆதரிக்க வில்லை என விளக்கும் விதத்தில் பெயர் மாற்றப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
மேலும் இந்த க்ரீமுக்கு புதிய பெயர் வைக்கப்படும் எனவும் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம் எனவும் அந்நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
