Header Ads

Breaking News
recent

ஜேர்மன் நம்பிக்கை ஒளி அமைப்பினர் ஊடாக 100குடும்பங்களுக்கு நிதி அன்பளிப்பு!!!

நேற்று 30/06/2020 மாலை புதுக்குடியிருப்பு பிரதேசசெயலர் பிரிவுக்குட்பட்ட மாணிக்கபுரம் கிராம சேவகர் பிரிவில் மிகவும் வறுமைக்குட்பட்ட போரால் பாதிக்கப்பட்ட 70முதியவர்களுக்கும் அத்தோடு வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் 30 பெண் தலமைத்துவக்குடும்பங்களுக்குமான ரூபாய் 1000ரூபாய் நிதி அன்பளிப்பாக நேற்று  மாலை வழங்கிவைக்கப்பட்டது. 

நேற்றைய இந்த உதவியானது புலம்பெயர் உறவான சிவஜீவன் அவர்களின் தந்தை அமரர். சுப்ரமணியம் சின்னத்தம்பி அவர்கள் அமரத்துவமடைந்து நேற்றுடன் 7ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையிலே அன்னாரின் நினைவு நாளை முன்னிட்டு குறித்த நிதி அன்பளிப்பு நேற்று வழங்கப்பட்டது.

இதனடிப்படையில் குறித்த நிதியை முல்லைத்தீவு மாவட்டத்தின் வறுமைக்குட்பட்ட பிரதேசத்தில் வழங்க ஜேர்மன் நம்பிக்கை ஒளி அமைப்பினர் அனுசரணை வழங்கியதோடு குறித்த நிகழ்வில் அமைப்பின் முல்லை மாவட்ட இணைப்பாளர் மற்றும் Max தமிழ் ஊடக வலையமைப்பின் ஊடகவியலாளர் திரு. எஸ். ரி பிரணவன் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கிவைத்தார்கள் அத்துடன் Max தமிழ் ஊடகவலைமைப்பானது ஊடகப்பங்களிப்பையும் வழங்கியிருந்தது. அத்தோடு ஜேர்மன் நம்பிக்கை ஒளி அமைப்பானது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதாரம் மற்றும் வறிய மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Powered by Blogger.