Header Ads

Breaking News
recent

குமார் சங்கக்காரவுக்கு விசேட விசாரணை பிரிவிடமிருந்து அழைப்பு!!!



2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியின் தலைவராக செயற்பட்ட குமார் சங்கக்கார இன்று (02) விசேட விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரான மஹிந்தானந்த அளுத்கமகேவின் கருத்து தொடர்பான விசாரணைகளில் வாக்குமூலம் அளிக்க வருமாறு முன்னாள் அணித்தலைவரான குமார் சங்கக்காரவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக மஹிந்தhனந்த அளுத்கமகே கூறியமை தொடர்பாக விசாரணை நடைபெறுவதுடன் நேற்று (01) உபுல் தரங்கவிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.
இந்த விடயம் தொடர்பில் முன்னாள் கிரிக்கெட் தெரிவுக்குழுத் தலைவரான அரவிந்த டி சில்வாவிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
Powered by Blogger.