Header Ads

Breaking News
recent

நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 230 இலங்கையர்கள் நாட்டிற்கு வருகை!!!


ஆபிரிக்கா நாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 230 இலங்கையர்கள் எத்தியோப்பியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் உதவியுடன் நாடு திரும்பியுள்ளனர்

எத்தியோப்பியாவில் உள்ள இலங்கை தூதரகம் , ஜனாதிபதி செயலகம், இலங்கை வெளியுறவு அமைச்சு மற்றும் ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் ஆகியவற்றுடன் இணைந்து குறித்த பயண ஒழுங்கை மேற்கொண்டிருந்தது

இதற்கமைவாக ஆபிரிக்கா நாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள் சிறப்பு விமானத்தின் மூலம் Addis Ababa விலிருந்து கொழும்பிற்கு நேற்றையதினம் அழைத்துவரப்பட்டுள்ளனர்

இதற்கமைய எத்தியோப்பியாவிலிருந்து 186 பேர், சூடானில் இருந்து 11 பேர், எகிப்திலிருந்து 8 பேர், மாலாவியிலிருந்து 7 பேர், தென் சூடானில் இருந்து 05 பேர், எக்குவடோரியல் கினியாவிலிருந்து 04 பேர் மாலியில் இருந்து 03 பேர் , சோமாலியாவிலிருந்து 02 பேர் மற்றும் பெனின், சிம்பாவே, நைஜீரியா மற்றும் மத்திய ஆபிரிக்க குடியரசில் இருந்து தலா ஒருவர் .வீதம் நாட்டிற்கு வந்தடைந்துள்ளதாக எத்தியோப்பியாவில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது
Powered by Blogger.