வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு தீர்மானம்!

குவைட்டில் சுமார் 43 லட்சம் மக்கள் தொகை காணப்படுகின்ற நிலையில், அவர்களில் 30 லட்சம் பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலையில் சரிவு மற்றும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக, குவைத்தில் வாழும் வெளிநாட்டினருக்கு எதிர்ப்பு எழுந்ததையடுத்து, வெளிநாட்டவர் எண்ணிக்கையை 70 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக குறைக்கும் திட்டத்தை பிரதமர் ஷேக் ஷபா அல் காலித் கடந்த மாதம் முன்மொழிந்தார்.
இந்த நிலையிலேயே, குறித்த யோசனைக்கு அந்த நாட்டு நாடாளுமன்றக் குழு அனுமதி வழங்கியுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.