Header Ads

Breaking News
recent

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : விசாரணைகளைத் துரிதப்படுத்த சட்டமா அதிபர் உத்தரவு!



உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய விசாரணைகள் முடிவடையாத 38 கோப்புக்கள் பதில் காவல்துறைமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணைகள் நிறைவு செய்யப்படாத 38 கோப்புக்கள் சட்டமா அதிபர் ஊடாக பதில் காவல்துறைமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

குறித்த கோப்புக்கள் தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்குமாறு பதில் காவல்துறைமா அதிபருக்கு அறிவித்துள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பாளரும் சட்டத்தரணியுடமான நிசாரா ஜெயரத்ன குறிப்பிட்டுள்ளார்.
Powered by Blogger.