Header Ads

Breaking News
recent

ஆகஸ்ட் 4: மாஸ்க் அணிவதா??? இல்லையா???


ஜேர்மனியின் வடகிழக்கு மூலையிலிருக்கும் Mecklenburg-Western Pomerania மாகாணத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகின்றது.

கொரோனா பரவல் குறைந்த அளவிலேயே இருக்குமானால் கடைகளில் மாஸ்க் அணியவேண்டியதன் அவசியம் இல்லையென்றே நான் எண்ணுகிறேன் என்கிறார் மாகாண வேளாண்மைத்துறை அமைச்சரான Harry Glawe.

ஆகஸ்ட் 4 ஆம் திகதி நடைபெற இருக்கும் கூட்டம் ஒன்றில் மாஸ்க் அணிவதற்கு முடிவு கொண்டு வருவது குறித்து அரசு அறிவிக்கும் என தான் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

சமூக இடைவெளி விதிகள் அமுலில்தான் இருக்கும் என்பதை நினைவுபடுத்த அவர் தவறவில்லை.

மொத்த வட ஜேர்மனியிலும் ஒரே சட்டம் இருக்கவேண்டும் என்பதை உறுதிப்படுத்த முயல்வதாக அவர் தெரிவித்தார்.

ஜேர்மனி முழுவதுமே மாஸ்க் அணிவதை முடிவுக்கு கொண்டு வருவதைக் காண தான் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

Gütersloh நகரிலுள்ள இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்றில் கொரோனா பரவியதற்குப்பின், கடந்த வாரம் மீண்டும் கொரோனா தொற்று குறையத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.