மேலும் 474 பேர் உயிரிழப்பு…!

கொரோனா தொற்று காரணமாக கடந்த 24 மணித்தியாலங்களில் இந்தியாவில் 474 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய, கொரானாத் தாக்கம் காரணமாக இந்தியாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 174 ஆக உயர்வடைந்துள்ளது
அத்துடன், 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புதிதாக அடையாளங் காணப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஏழு லட்சத்து 20 ஆயிரத்து 346 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, பிரேசிலில் கடந்த 24 மணித்தியாலங்களில் 656 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், பிரேசிலில் 16 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில். 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், கடந்த 24 மணித்தியாலங்களில் அமெரிக்காவில் 351 பேரும், மெக்சிகோவில் 273 பேரும் உயிரிழந்துள்ள அதேவேளை, ஈரானில் 160 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய, கடந்த 24 மணித்தியாலங்களில் சர்வதேச ரீதியில் மூவாயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, கொரோனா தாக்கம் காரணமாக சர்வதேச ரீதியில் இதுவரை ஐந்து லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 11 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.