பாதசாரியை முட்டி மோதிய கசிப்பு கடத்தல் பைக்!!!
(அலுவலக செய்தியாளர்)
இன்று (07) இரவு 8.10 மணியளவில் முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் பாடசாலை முன்பாக A35 வீதியில் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்துத் தொடர்பாக மேலும் தெரியவருவது வள்ளிபுனம் பாடசாலை முன்பாக வீதியில் நடந்து சென்ற நபரை மோட்டார் வண்டியில் வேகமாக கசிப்பு கடத்தி வந்த நபர் முட்டி மோதினார் இதனால் வள்ளிபுனம் பகுதியை சேர்ந்த பாலன் என அழைக்கப்படும் நபர் படுகாயமடைந்தார்.
விபத்து நடந்த இடத்தில் பல லீற்றர் கசிப்பு சிந்தியிருந்தது. 4 பெரிய பொலித்தின் பைகளில் 40 லீற்றர் வரையான கசிப்பு கடத்திவந்த உந்துருளியே பாதசாரியை முட்டி மோதியுள்ளது.
கசிப்பை கடத்தி வந்த நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிஓடியுள்ளார்.
சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிசார் தற்போது விசாரனை செய்து வருகிறார்கள்.
படுகாயமடைந்த நபர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு பிரதேச மக்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.


