இலங்கையில் நடந்த பயங்கரம்! மகளை கள்ளக் காதலனுக்கு பங்கு போட்ட தாய்!

இவர்கள் இருவரும் அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதியும் மாவட்ட நீதிபதியுமான எம்.எச்.எம்.ஹம்ஸா முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோதே அவர்களை எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 3 வருடங்களாக தந்தை வெளிநாட்டில் தொழில் புரியும் நிலையில் சிறுமியின் தாய் வர்த்தகர் ஒருவருடன் தொடர்பைப் பேணி வந்துள்ளார். இந்த நிலையில், சுற்றுலா செல்வதாகக் கூறி மகளை அழைத்துச் சென்ற தாய் இரவு தங்கு விடுதி ஒன்றில் மகளை தனியான அறையில் தங்க வைத்து விட்டு குறித்த காதலனுடன் தாய் தனியாக இருந்துள்ளார்.
அத்துடன் மகளுக்கு மயக்க மருந்தைக் கொடுத்து கள்ளக் காதலனுக்கு பாலியல் வன்மத்திற்கு ஏற்பாடு செய்து கொடுத்ததாக ஆரம்பக் கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
மயக்கம் தெளிந்து சிறுமி விடயத்தை உணர்ந்த போதிலும் தாயும் கள்ளக் காதலனும் வெளியில் சொன்னால் பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டிவரும் என அச்சுறுத்தியுள்ளனர்.
எனினும் வீடு வந்து சேர்ந்த சிறுமி வேதனை தாங்க முடியாமல் உறவினரிடம் குறித்த விடயத்தைக் கூறியதைடுத்து சந்தேக நபர்கள் இருவரும் அக்கரைப்பற்று பொலிஸார் கைதாகினர்.
இவ்வாறு கைதான நபர்கள் இருவரையும் விசாரித்த நீதிவான் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். பாதிப்புக்குள்ளான சிறுமி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர்கள் இருவரும் அம்பாறை மாவட்டத்திலுள்ள அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆவர்