வவுனியா தனிமைப்படுத்தல் முகாமில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி!!!
வவுனியா பம்மைமடு தனிமைப்படுத்தல் முகாமை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகள் முடிவுகள் இரவு 8.30 மணிக்கு வெளியாகிய நிலையிலேயே இக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியா பம்மைமடு தனிமைப்படுத்தல் முகாமை சேர்ந்த 32 பேருடன், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்த 55 பேருக்குமாகச் சேர்த்து 87 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
