Header Ads

Breaking News
recent

கொழும்பு ஜிந்துபிட்டி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது !


கொழும்பு 13 ஜிந்துபிட்டி பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் குறித்த பகுதயில் 143 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் கொழும்பு ஜிந்துபிட்டி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 


இந்தியாவிலிருந்து வருகைதந்த இலங்கை கடல்பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் 14 தினங்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்ட்டார். 

எனினும் அவருக்கு தொற்றுக்கான அறிகுறிகள் இல்லாததால், ஜிந்துபி;ட்டி பகுதியிலுள்ள அவரது வீட்டில் மேலும் 14 தினங்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டார். 

தனிமைப்படுத்தல் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் ஊடாக அவர் கொவிட் 19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் அவரால் சமூகத்தில் வைரஸ் தொற்று பரவாதெனவும் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லையெனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 

எனினும் குறித்த நபருடன் தொடர்பை பேணிய ஜிந்துபிட்டி 123 ம் இலக்க தோட்டத்தைச் சேர்ந்த 29 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
Powered by Blogger.