இடுகம கொவிட் - 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்புத்தொகை ஆயிரத்து 423 மில்லியன்....

தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகள் மூலமாக தொகை அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.
வழங்கப்பட்ட காசோலைகள் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டன.
உள்நாட்டு, வெளிநாட்டு நன்கொடையாளர்களும் இடுகம கொவிட் - 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு பங்களிப்பு செய்து வருகின்றனர்.
காசோலைகள் அல்லது டெலிகிராப்கள் மூலம், www.itukama.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக அல்லது #207# என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பங்களிப்பை செய்ய முடியுமென அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.