இங்கிலாந்து-பாகிஸ்தான் போட்டிக்கான அட்டவணை அறிவிப்பு!

3 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த மாதம் இறுதியில் இங்கிலாந்துக்கு சென்றிருந்தது.
தம்மைத் தனிமைப்படுத்தி கொண்டுள்ள பாகிஸ்தான் அணியினர் அருகில் உள்ள மைதானத்தில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டித் தொடர் நடைபெறும் திகதி இறுதி செய்யப்படாமல் இருந்த நிலையில் இங்கிலாந்து – பாகிஸ்தான் போட்டிக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் ஓகஸ்ட் 5ஆம் திகதியும், 2-வது மற்றும் 3-வது டெஸ்ட் போட்டிகள் சவுதம்டனில் முறையே ஓகஸ்ட் 13 மற்றும் 21 ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளது.
அத்துடன், இவ்விரு அணிகளுக்கிடையிலான மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் மான்செஸ்டரில் முறையே ஓகஸ்ட் 28 ஆம் திகதி, ஓகஸ்ட் 30 ஆம் திகதி மற்றும் செப்டம்பர் 1 ஆம் திககளில் நடக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.