தொல்பொருள் தொடர்பான செயலணியின் உறுப்பினராக ஆனந்த பீரிஸ் நியமனம்!

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ், கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் பாரம்பரியத்தை நிர்வகிப்பதற்காக நியமிக்கப்பட்ட செயலணியின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கமைய, ஜனாதிபதி செயலாளர் பீ.பி ஜயசுந்தரவின் கையொப்பத்துடன், இது தொடர்பான வர்த்தமானி நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் பாரம்பரியத்தை நிர்வகிப்பதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் கடந்த ஜுன் மாதம் முதலாம் திகதி செயலணியொன்று அமைக்கப்பட்டது.
எல்லாவல மேதானந்த தேரரின் தலைமையில் அமைக்கப்பட்ட குறித்த செயலணியில் 11 பேர் உறுப்பினர்களாக செயற்படுகின்றனர்.
இதேவேளை, பாதுகாப்பான நாடு , நல்லொழுக்கமுள்ள மற்றும் சட்டத்தை மதிக்கும் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான செயலணியின் உறுப்பினராக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷாரா உபுல்தெனிய நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலாளர் பீ.பி ஜயசுந்தரவின் கையொப்பத்துடன், இது தொடர்பான வர்த்தமானி நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த செயலணி, கடந்த ஜுன் மாதம் இரண்டாம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் அமைக்கப்பட்டது.
13 பேர் அடங்கிய குறித்த குழுவின் தலைவராக பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன செயற்படுகின்றார்.
அத்துடன், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனர் ஷவேந்திர சில்வா உள்ளிட்டோர் ஏனைய உறுப்பினர்களாக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.